பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

கே.ஜி.கண்டிகை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறு தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் சனிக்கிழமை திறந்துவைத்தார்.


கே.ஜி.கண்டிகை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறு தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் சனிக்கிழமை திறந்துவைத்தார்.
இந்த கிராமத்தில் புதிதாக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் சிறு தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆவின் பால்வளத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் தலைமை வகித்தார். பொது மேலாளர் ராமநாதன், துணைப் பதிவாளர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர் பி. எம்.நரசிம்மன் கலந்து கொண்டு பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் ஆவின் மேலாளர்கள் உமா சங்கர், அனீஷ் ஆனந்த், சதீஷ்குமார் உள்பட மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com