Enable Javscript for better performance
அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    


    செங்குன்றம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
     புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி சுதா. இருவரும் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோ இருந்த 5 சவரன் நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63) வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ. 43 ஆயிரம் ரொக்கமும், பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (44) வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ. 13 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai