Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதி இருவர் பலி- Dinamani

சுடச்சுட

    


    குண்டலூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 
    திருத்தணி அடுத்த வேலஞ்சேரியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(24) தனியார் நிறுவன ஊழியர். இவர் திருத்தணி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின்மீது நேருக்கு நேர் மோதினார். இதில், குண்டலூரைச் சேர்ந்த  சுரேஷ் மற்றும் வெங்கடேசன் படுகாயமடைந்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்கடேசன் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai