Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களுக்கு ஆக. 9-இல் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஆக. 9-இல் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அனைத்துக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மேற்குறிப்பிட்ட நாளில் திருவள்ளூர் அருகே திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
    இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் இருந்து கட்டாயம் அடையாளச் சான்று பெற்று வரவேண்டும். இப்போட்டிகளில் வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 
    அதேபோல், மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர் ஆவர். அதனால், கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டிகளில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai