Enable Javscript for better performance
பெண் குழந்தைகளைக் காப்போம்-கற்பிப்போம் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பெண் குழந்தைகளைக் காப்போம்-கற்பிப்போம் விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 25th July 2019 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    awarnes


    பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
    திருவள்ளூர் மாவட்ட சமூகநலத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தரங்கம் செங்குன்றம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். மேலும் பெண் குழந்தைகளைக் காப்பது, அவர்களுக்குக் கற்பிப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி, பொதுப்பணித் துறை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில், பள்ளியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்றனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பொதுப்பணித்துறை தெருவில் உள்ள வீடுகளில் பெண் குழந்தைகளைக் காப்பது, கற்பிப்பது குறித்து விழிப்புணர்வுக் கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
    நிகழ்ச்சியில், செங்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் ஜோஸ்பின், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai