Enable Javscript for better performance
பொன்னியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா- Dinamani

சுடச்சுட

    


    செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் புதன்கிழமை கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
    இக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 
    இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜ், நல்லூர் ஊராட்சி அதிமுக செயலர் எஸ்எம்ஜி.சீனிவாசன், சோழவரம் ஒன்றிய அதிமுக இளைஞர் அணி துணைச் செயலர் ரமேஷ் உள்ளிட்டோர், கூழ்வார்த்தல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில், 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai