Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாமில் 120 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு முகாமில் 120 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழையனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 120 பயனாளிகளுக்கு ரூ. 19 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வருவாய்க் கோட்டாட்சியர் பவணந்தி வழங்கினார்.
    பழையனூர் கிராமத்தில் திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. திருத்தணி வட்டாட்சியர் செங்கலா வரவேற்றார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
    இதில், 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து, தகுதிவாய்ந்த 66 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 7 பேருக்கு  தேசிய முதியோர் உதவித்தொகை, ஒருவருக்கு விதவை உதவித் தொகை, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, ஒருவருக்கு இறப்புச் சான்று, 8 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, 5 பேருக்கு ஓபிசி சான்று, 10 பேருக்கு வாரிசுச் சான்று, 5 பேருக்கு விதவைச் சான்று, 8 பேருக்கு பட்டா மாற்றம், 7 பேருக்கு சிறுவிவசாயி சான்று என மொத்தம் 120 பயனாளிகளுக்கு ரூ. 19 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
    அகரம் கிராமத்தில்...
    பொன்னேரி வட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
    தனி வட்டாட்சியர் சங்கிலிரதி முன்னிலை வகித்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் செல்வகுமார் வரவேற்றார். இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு  மனுக்கள் பெறப்பட்டு, 11பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான சான்றிதழ்கள், 22 பேருக்கு பட்டா, 220 பேருக்கு சிறு விவசாயி சான்றுகள், 111 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் உள்பட மொத்தம் 364 பேருக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன. முகாமில், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அயநெல்லூரில்...
    கும்மிடிப்பூண்டியை  அடுத்த அயநெல்லூரில் நடைபெற்ற முகாமுக்கு, கும்மிடிப்பூண்டி  வட்டாட்சியர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் மாலினி, ரமேஷ், தனி வட்டாட்சியர் உமா, வருவாய் ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்ட சிறுபான்மை மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பெருமாள் சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், பட்டா  மாற்றம் தொடர்பாக 11 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை தொடர்பாக ஐந்து பயனாளிகளுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், முதியோர் உதவித் தொகை என 28 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai