Enable Javscript for better performance
17,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    


    கும்மிடிப்பூண்டி அருகே வாகனச் சோதனையில் 17,500 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
    எளாவூர் அருகே ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் மதுரை, திருச்சி மத்திய புலனாய்வுப் பிரிவு மதுவிலக்கு ஆய்வாளர்கள் ராஜசேகர், ராம்குமார் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், எரிசாராய கேன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    விசாரணையில், மத்தியப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு 500 கேன்களில் தலா 35 லிட்டர் என 17,500 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த சூசைராஜ் (54), திருவண்ணாமலையைச் சேர்ந்த சத்தியராஜ் (46) ஆகியோரை கைது செய்து, எரிசாராயத்துடன் லாரியைப் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai