முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
1,304 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
By DIN | Published On : 30th July 2019 07:43 AM | Last Updated : 30th July 2019 07:43 AM | அ+அ அ- |

பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் 1,304 மாணவிகளுக்கு திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, திருத்தணி மாவட்டக்கல்வி அலுவலர் பழனிசேகர் தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சசிகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசுகையில், பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1304 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலாளர் டி.டி.சீனிவாசன், பொதட்டூர்பேட்டை பேரூர்ச் செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன், பேரூர் அதிமுக நிர்வாகிகள் குமரேசன், சக்கரப்பன், வேலு, சுகாஷினி ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.