எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா

ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் 7-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் 7-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, தினமும் காலை அம்மனுக்கு  அபிஷேகம், பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூர்வார்த்தல், வேப்பிலை கரகம், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 285 பேர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.  விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com