Enable Javscript for better performance
திருத்தணி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

    By DIN  |   Published on : 01st June 2019 02:07 AM  |   அ+அ அ-   |    |  

    tiruthani


    திருத்தணி பேருந்து நிலையத்தை பழக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொம்மைக் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், பயணிகள் நிற்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
    திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம், அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்துக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக, நகராட்சி நிர்வாகம் இங்கு நிழற்குடை, நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் மின்விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. 
    இந்நிலையில், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பழக்கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைக் கடைகளை அமைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். பயணியர் பேருந்துக்காக காத்திருக்கும் போது, இந்தக் கடைகளுக்கு அருகே நின்றால், அவர்களை வியாபாரிகள் விரட்டுகின்றனர். இதனால், பெரும்பாலான பயணியர் பேருந்து நிலையத்துக்கு வெளியே காத்திருந்து பேருந்து வந்தவுடன் ஏறிச் செல்கின்றனர். பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றாமல், நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளையும், பேருந்து நிலையத்திலேயே இரவும், பகலும், தங்கி இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
    இந்த விவகாரம் குறித்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறியது:
    திருத்தணி பேருந்து நிலையத்தில் நடைபாதையில் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக இதுவரை யாரும் புகார் தரவில்லை. மேலும் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இந்த நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்னும் சில தினங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகளை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கி போலீஸாரின் அனுமதியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp