மண் திருட்டு: இருவர் கைது
By DIN | Published On : 01st June 2019 02:07 AM | Last Updated : 01st June 2019 02:07 AM | அ+அ அ- |

நாலூர் ஏரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை மீஞ்சூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாலூர் ஏரியில் மண் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மீஞ்சூர் போலீஸார், நாலூர் ஏரிப் பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டிராக்டர்களில் மண் அள்ளிக் கொண்டிருந்த இருவரைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் நாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (35), முருகன்(34) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.