வாய்ப் புற்றுநோய் கண்டறியும் முகாம்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி சார்பில்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் வாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். 
திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் செயல்பட்டு வரும் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் ஒவ்வோர் ஆண்டும் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணி மற்றும் வாய்ப் புற்றுநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு இந்திரா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இந்திரா ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் கல்விக் குழுமத்தின் தலைவரும், திருவள்ளூர் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு புற்றுநோய் கண்டறியும் முகாமைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் சிகிச்சை மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர். 
அதற்கு முன் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணி பேருந்து நிலையச் சாலை, பஜார், காமராஜர் சிலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கலைச்சங்க மைதானத்தை அடைந்தனது. கல்லூரி முதல்வர் வெங்கட்பிரசாத், துணை முதல்வர்கள் வீரகுமார் மற்றும் இந்திரா பிரியதர்ஷினி, துறைத் தலைவர்கள் சீனிவாசன், லோகநாதன் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com