ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது
By DIN | Published on : 14th June 2019 03:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஊத்துக்கோட்டை அருகே ஆற்றில் மணல் கடத்தி வந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி ஆற்றுப் பகுதில் ஆரணி போலீஸார் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த மேல் முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த நேதாஜி (19), ஐயப்பன் (22) ஆகிய இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.