சுடச்சுட

  


  திருத்தணியில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கோரி மனு அளித்தனர்.
  திருத்தணி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம், செயற்பொறியாளர் கனகராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகுமார், விவசாயிகள், மின் நுகர்வோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
   அப்போது, விவசாயிகள், புதிய மின் இணைப்புகள் வழங்க வேண்டும், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 மின்நுகர்வோர்கள் தங்களிடம் இருந்து அதிக மின்கட்டணத்தை வசூலித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.  குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை மனுக்களாக வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai