சுடச்சுட

  


  மீஞ்சூர் அருகே உள்ள முரிச்சம்பேடு கிராமத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 
  முரிச்சம்பேடு ஏரிக்கரை கிராமத்தில் வசிப்பவர் சித்ரா (40). இவர், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் சித்ரா குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறினர். மேலும், அருகே இருந்த 3 குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. 
  தகவலறிந்த, பொன்னேரி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அனைத்தனர். எனினும் தீ விபத்து 4 குடிசை வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாயின. 
  இதையடுத்து பொன்னேரி வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட  4 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் பணம், வேட்டிகள்,  சேலைகள்,  அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர். 
  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னோரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai