ஜமாபந்தியில் 402 பயனாளிகளுக்கு சான்று

பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தேர்வு செய்யப்பட்ட 402 பயனாளிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் சான்றிதழ் வழங்கினார்.
 பள்ளிப்பட்டு வட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜமாபந்தி முகாம் துவங்கியது.  மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் செல்வம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 1,400 பேர் பங்கேற்று மனுக்களை வழங்கினர். மனுக்கள் மீது வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு, 402 பயனாளிகளைத் தேர்வு செய்தனர்.
 முகாம் நிறைவு விழாவில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். வட்டாட்சியர் மீனா, தனி வட்டாட்சியர் சரவணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மதன், வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தியின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் மொத்தம் 208 மனுக்களை தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதியிடம் வழங்கினார்.
 கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி  வட்டாட்சியர் சுரேஷ்பாபு, துணை வட்டாட்சியர் ரமேஷ், தனி வட்டாட்சியர் உமா,  மண்டலத் துணை வட்டாட்சியர் உமா சங்கரி, வட்ட வழங்கல் அலுவலர் கனகவள்ளி, வருவாய் ஆய்வாளர் ரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், ஆறுமுகம், ராஜசேகர், பழனி, ஷர்மிளா, பார்த்தசாரதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின் 4-ஆம் நாளில் மேலக்கழனி, சென்னாவரம், நத்தம், நரசிங்கபுரம், மங்காவரம், தேர்வழி, பெத்திக்குப்பம், பெரியப்புலியூர், பாஞ்சாலை, பூவலம்பேடு, சித்தூர்நத்தம், அமிர்தமங்கலம், கொள்ளானூர், மாதவரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஜமாபந்தி அலுவலரான தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதியிடம் அளித்தனர்.
 ஜமாபந்தி முடிவில் பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 208 மனுக்களை அளித்தனர். இதில், உடனடியாக 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு  மனுதாரர்களுக்கு உரிய ஆணைகளை தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதி வழங்கினார். 204 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com