மாணவர்களுக்கு நல உதவிகள்

திமுக தலைவர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாளை ஒட்டி, கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூரில் உள்ள சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.


திமுக தலைவர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாளை ஒட்டி, கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூரில் உள்ள சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு, திமுக தலைமைச் செயற்குழு  உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்து, 120 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுகோல் உள்ளிட்டவற்றை வழங்கினார். ஒன்றிய துணைச் செயலர் திருமலை முன்னிலை வகித்தார். 
இதைத் தொடர்ந்து பெருவாயல் பகுதியில் திமுக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு  நல உதவிகளை வழங்கிய  திமுக  தலைமை  செயற்குழு  உறுப்பினர்  டி.ஜே.கோவிந்தராஜன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com