இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு குறைதீர் நாள்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 19) நடைபெற உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாலாஜி தெரிவித்துள்ளார்.  
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளான அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், புற உலக சிந்தனையற்றவர் (ஆட்டிசம்), கண் பார்வையற்றோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர், கடும் நரம்பு மண்டல பாதிப்புக்குள்ளானோர், குள்ளத்தன்மை, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், ரத்த ஒழுக்கு நோய்  (அ) ரத்தம் உறைதல் தடைபடுதல், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இயக்கப்பண்பு குறைபாடு (அ) கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறைபாடு உடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பல்வகை பாதிப்புடையோர், மூளை, தண்டுவட மரபு நோய், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், பார்க்கின்சன் நோய், அரிவாள் உரு சிகப்பணு சோகை, சிக்கில் செல் நோய், ரத்த சிகப்பணுக்கள் அரிவாள் வடிவத்தில் மாறுதல், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், பேச்சு மற்றும் மொழி குறைபாடு, பேச்சு மற்றும் மொழி குறைபாடு, ரத்த அழிவு சோகை, பல்வகை ஊனம் (அ) பல்வகை பாதிப்பு ஆகிய 21 வகையான மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. 
இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மேற்குறிப்பிட்ட நாளில்  நடைபெற உள்ள. இதில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதைத்தொடர்ந்து அன்றைய நாளில் மாலை 4 மணி அளவில் பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com