ஜமாபந்தியில் 269 மனுக்கள் அளிப்பு

கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தியின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் மொத்தம்

கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தியின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் மொத்தம் 269 மனுக்களை தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதியிடம் வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்  தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதி தலைமையிலும்,  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு, துணை வட்டாட்சியர் ரமேஷ், தனி வட்டாட்சியர் உமா, மண்டலத் துணை வட்டாட்சியர் உமா சங்கரி, வட்ட வழங்கல் அலுவலர் கனகவள்ளி, வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பாக்யசர்மா, உதயா, ராஜா, கவிதா ஆகியோர் முன்னிலையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.
ஜமாபந்தி முடிவில் பட்டா மாற்றம் தொடர்பாக 87 மனுக்களும், வீட்டு மனைப் பட்டா தொடர்பாக 29 மனுக்களும், பட்டா மேல்முறையீடு தொடர்பாக 21 மனுக்களும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 118 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக ஒரு மனுவும், சான்றிதழ்கள் தொடர்பாக 6 மனுக்களும், இதர மனுக்கள் 7 என மொத்தம் 269 மனுக்களையும் பொதுமக்கள் அளித்தனர்.
இதில் உடனடித் தீர்வு காணப்பட்ட 3 மனுக்கள் மீது உரிய ஆணைகளை தனித்துணை ஆட்சியர் பெ.பார்வதி வழங்கினார். மேலும் 13 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதர 253 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com