டி.ஜே.எஸ். பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில், கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில், கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
  விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலர் டி.ஜே.ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜே.தேசமுத்து, இயக்குநர்கள் ஆ.பழனி, ஆ.விஜயகுமார், ஆ.கபிலன், தே.தினேஷ், கோ.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம் வரவேற்றார்.
  விஜிபி உலகத்தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் சிலையைத் திறந்து வைத்தார்.  நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசுகையில், திருக்குறள் மட்டுமே எல்லா காலத்துக்கும் பொருந்தும் நீதி நூல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை மாணவர்கள் மறக்கக் கூடாது என்றார்.
 விஜிபி உலக தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் பேசுகையில், விஜிபி உலக தமிழ்ச் சங்கம் சார்பில் 45-ஆவது திருவள்ளுவர் சிலை இப்பள்ளியில் அமைக்கப்பட்ட நிலையில், 50-ஆவது சிலை ஜூலை மாதம் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆவது உலக தமிழ் மாநாட்டில் நிறுவப்பட உள்ளது. 
திருவள்ளுவர் சிலையை உலகெங்கும் தமிழர்கள் உள்ள பகுதிகளில் அமைக்கும் பணியை விஜிபி உலகத் தமிழ் சங்கம் முன்னெடுத்து வருகிறது, திருக்குறளின் சிறப்பை உணர்ந்தே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ஒரு குறளைச் சொல்லி தனது பேச்சை தொடங்குகிறார் என்றார். நிகழ்ச்சியில், தமிழறிஞர் வ.விஜயரங்கன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com