ரூ.335.13 கோடியில் 600 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் 

திருவள்ளூர் அருகே ஆவடியில் ரூ. 335.13 கோடி மதிப்பிலான 54.6 ஏக்கரில் 600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்

திருவள்ளூர் அருகே ஆவடியில் ரூ. 335.13 கோடி மதிப்பிலான 54.6 ஏக்கரில் 600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர். 
திருவள்ளுர்  மாவட்டம், ஆவடி அருகே தண்டுரை கிராமத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் நகர நிலவரித் திட்டம் சார்பில், பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 600 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த அரசு தான் கிராமப்புறத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது. இதன் அடிப்படையில், ஆவடி வட்டத்தில் ரூ. 335.13 கோடி மதிப்பிலான 54.6 ஏக்கர் பரப்பிலான நிலத்தில்  பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியது:
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் 4,12,000 வாக்காளர்கள் உள்ளனர். அதனால், ஆவடி தொகுதியில் நிறைய குடும்பங்களுக்கு பட்டா இல்லாத குடியிருப்புகளாக உள்ளது. அத்துடன், விரைவாக வளர்ந்து வரும் இப்பகுதியில் பாதிக்குப் பாதி பட்டா இல்லா நிலங்கள் உள்ளன. ஆவடி பகுதியில் மக்கள் நீர் நிலைகளின் அருகில் குடியிருக்கின்றனர். 
இதுபோன்ற நிலைகளில் நிலப்பகுதி வரையறுக்கப்பட்ட பின், பட்டாக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பட்டா இல்லாத 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா முழுமையாக கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். 
மேலும், பருத்திப்பட்டு ஏரியை நல்ல இயற்கை வளம் மிக்க பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற ரூ. 32 கோடிக்கு நிதியில் பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 8 ஆயிரம் குடும்பங்களுக்கு  பட்டா வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 
அதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் ஆகியோர் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.அலெக்சாண்டர், தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், ஆவடி நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com