சுடச்சுட

  

  மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு உத்தரவு

  By DIN  |   Published on : 26th June 2019 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கும்மிடிப்பூண்டி சரக காவல் துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
   ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன. 
   இதையொட்டி, போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் போன்றவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணர்த்தும் வகையில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
  மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பிரசாரம், பேரணி, விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவற்றை நடத்த காவல் துறையினருக்கு டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவிட்டுள்ளார். 
   இதன் மூலம் கும்மிடிப்பூண்டியில் பொது அமைதி காக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai