28-இல் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் வரும் 28-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் வரும் 28-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கடந்த மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது, மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தது. இந்நிலையில், அன்றைக்கு நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டத்தை வரும் ஜூன் 28-ஆம் தேதி நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
எனவே அன்றைய நாளில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,  திட்ட அறிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை தடைசெய்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-20 குறித்தும் விவாதிக்கப்பட  உள்ளது. 
 முன்னோடி தமிழகம், சுகாதார உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுதல், குழுக்களுக்கு ஒத்துழைப்பு, கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகளை நடத்துதல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், நீர் நிலைகளை பாதுகாத்தல், மண்புழு உரம் தயாரித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகளிர் திட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. 
  எனவே, இக்கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்து அறிந்து 
கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com