இன்ஸ்பையர் விருதுக்கு மாணவர்கள் இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவில் (இன்ஸ்பையர்) புத்தாக்க

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவில் (இன்ஸ்பையர்) புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விவரங்களை இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்தார்.
   பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதன் மூலம் புதிய அறிவியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புக்கு தூண்டுவதே நோக்கமாகும். இதன் அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகையும் முன்கூட்டியே வழங்கப்படும். இந்த நிதியை வைத்து மாணவ, மாணவிகள் சிறந்த அறிவியல் படைப்பை தயார் செய்ய வேண்டும். இதை மாவட்ட, மாநில அளவில் விருதுகளை வழங்க தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், மாவட்டக் கல்வித் துறையுடன், இணைந்து 'இன்ஸ்பையர்' விருதுக்கான கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில், சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்படுவோருக்கு  தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இன்ஸ்பையர் விருதை வழங்கி வருகிறது.
 அதேபோல், நிகழாண்டுக்கான இன்ஸ்பையர் விருதுக்கு மாணவ, மாணவிகள் இணையதளம்  மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும், தலா 5 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் தலா 3 பேரும் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் போதே பள்ளியின் விவரம், மாணவ, மாணவிகளின் விவரம் ஆகியவற்றை தலைமை ஆசிரியர்கள்   ‌w‌w‌w.‌i‌n‌s‌p‌i‌r‌e​a‌w​a‌r‌d‌s-‌d‌s‌t.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் மூலம் விவரமாக பதிவு செய்ய வேண்டும்.   
 இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், நிகழாண்டுக்கான இன்ஸ்பையர் விருதுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதனால் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்ஸ்பையர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போதே படைப்புக்கான தலைப்பையும் இணையதளம் மூலம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். படைப்புகள் தயார் செய்வதை  தெளிவான படைப்பு நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியர்களால், தேர்வு செய்யப்படுகிறது. அதனால், விண்ணப்பிக்கும் போதே தலைப்பின் அடிப்படையிலேயே படைப்புகளை மட்டும் கண்காட்சியில் இடம் பெறச் செய்யவுள்ளதால், பதிவு செய்யும் முழு விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com