சானூர் மல்லாவரத்தில் நான்கு கன்றுகள் ஈன்ற பசு

சானூர் மல்லாவரம் கிராமத்தில் பசுமாடு ஒரே நேரத்தில் 4 கன்றுகள் ஈன்றுள்ளது.

சானூர் மல்லாவரம் கிராமத்தில் பசுமாடு ஒரே நேரத்தில் 4 கன்றுகள் ஈன்றுள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சானூர் மல்லாவரம் காலனியைச் சேர்ந்த விவசாயி டேவிட்(45). மனைவி தவமணி. 7 வயதுடைய நாட்டு ரகப் பசுமாட்டை வளர்த்து வந்தனர். இப்பசுமாடு ஒரே நேரத்தில் 4 கன்றுகளை ஈன்றது. இதனைடுத்து கிராம மக்கள் கன்றுகளை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். கன்றுகள் ஆரோக்கியத்துடன் உள்ளன.
அப்பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சம்பூர்ணம் ஆகியோர் கன்றுகளை மருத்துவப் பரிசோதனை செய்தனர்.  தலா 2 பெண்,  காளைக் கன்றுகளை பசு ஈன்றது. இக்கன்றுகள் உடல் எடை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளன. சில நேரங்களில் பசுவின் கர்ப்பப்பையில் இரண்டு முட்டைகள் இருந்தால் இரண்டு கன்றுகள் பிறப்பதுண்டு. 
அதற்கு மாறாக 4 கன்றுக் குட்டிகள் ஈன்றுள்ள பசுவின் கர்ப்பப்பையில்  2 முட்டைகள் நான்கு கருமுட்டைகளாகப் பிரிந்துள்ளதால் 4 கன்றுகள் பிறந்துள்ளதாக கால்நடை  மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com