பொறியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியின் மின்னியல் துறை சார்பில் 9-ஆவது தேசியக் கருத்தரங்கு சனிக்கிழமை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியின் மின்னியல் துறை சார்பில் 9-ஆவது தேசியக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கினிஸ்டா-2019 என்ற பெயரிலான இக்கருத்தரங்கிற்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். ஜீன் மார்டின் சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குனர் உமா பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மின்னியல் பொறியியல் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள நிலையில் அவற்றுக்கான தகுதிகளை, படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு கல்லூரி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட 27 கட்டுரைகள் அடங்கிய மலரை டி.ஜே.கோவிந்தராஜன் வெளியிட்டார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு திட்ட விளக்கவுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஷ்னெல்டர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் எஸ்.யுவராஜ் மூர்த்தி பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியின் மின்னியல் துறை செய்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com