சுடச்சுட

  

  அதிமுக கூட்டணிக்கு ஆதரவு: அம்பேத்கர் மக்கள் கட்சி முடிவு

  By DIN  |   Published on : 17th March 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அம்பேத்கர் மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
   இதுகுறித்து அம்பேத்கர் மக்கள் கட்சியின் தலைவர் மத்தியாஸ், பொதுச் செயலாளர் எ.சக்கரபாணி, பொருளாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
   தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசின் உதவிகளைப் பெறும் நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதை வரவேற்கிறோம். மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai