சுடச்சுட

  

  பணியில் ஈடுபட்டிருந்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 5 பேர் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
   பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பேரூராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உள்பட்ட வாணிவிலாசபுரம் பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து வந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு வந்தது. அங்கு, பீமன் என்பவர் தனியாக மின் மோட்டார் அமைத்து, குடிநீர் உறிஞ்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், ஆத்திரமடைந்த பீமனின் மகன்கள் மூர்த்தி, பாஸ்கர், அவரது உறவினர் பழனி ஆகியோர், துப்புரவுப் பணியாளர்கள் ரவி, பாண்டியன், தாமு, கருணா, குமரவேல் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
   இதுகுறித்து, துப்புரவுப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai