சுடச்சுட

  

  பொன்னேரியில் சாலையோரக் கட்டடத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் சாலையில் விழுப்புரம் கோட்டப் பணிமனைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தைக் கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோர வணிக வளாகக் கட்டடத்தின் மீது பேருந்து மோதியது. அப்போது, பேருந்தின் சக்கரங்கள் கால்வாயில் சிக்கின. இதனால் உடனடியாக பேருந்தை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தாயுமான் செட்டி தெரு, பொன்னேரி- செங்குன்றம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
   தகவலறிந்து வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்தை எடுத்துச் சென்றபின், போக்குவரத்து சீரானது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai