அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், திமுக போட்டியிட உள்ளதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 ஓரிரு நாள்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேர்தல் பணிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கட்சியின் சின்னம், சுவர் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர்.
 அதே நேரத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் முக்கிய திமுக பிரமுகர்கள் சனிக்கிழமை திருத்தணி முருகப்பெருமானை வணங்கி விட்டு திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com