நாளைக்குள் ஆலையில் கரும்புகளைச் சேர்க்க வேண்டும்: கரும்பாலை மேலாண்மை இயக்குநர்

கரும்பு வெட்டு உத்தரவு பெற்று இதுவரை ஆலைக்கு விநியோகம் செய்யாமல் உள்ள விவசாயிகள், வெள்ளிக்கிழமைக்குள்

கரும்பு வெட்டு உத்தரவு பெற்று இதுவரை ஆலைக்கு விநியோகம் செய்யாமல் உள்ள விவசாயிகள், வெள்ளிக்கிழமைக்குள் (மார்ச் 22) கரும்பை ஆலையில் சேர்க்க வேண்டும் என கரும்பாலை நிர்வாக மேலாண்மை இயக்குநர் சாமுண்டீஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
 திருவாலங்காட்டில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018 -19-ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை,  கடந்தாண்டு அக்.5-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை வரை, 2.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில், ஆலைக்குப் பதிவு செய்யப்பட்ட பெருவாரியான பதிவு கரும்பு அறுவடை செய்யப்பட்டு ஆலையில் அரவை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நடப்பாண்டிற்கான கரும்பு அரவைப் பருவம்,  வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவு செய்யப்பட உள்ளது.
 இதுகுறித்து கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் சாமுண்டீஸ்வரி கூறும்போது,  நடப்பாண்டிற்கு கரும்பு அரவையை வரும் சனிக்கிழமையுடன் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். ஆகையால் கரும்பு வெட்டு உத்தரவு பெற்று இதுவரை கரும்பு சப்ளை செய்யாமல் உள்ள விவசாயிகள், வரும் 22-ஆ ம் தேதிக்குள் கரும்பை ஆலையில் சேர்க்க வேண்டும்.
 தவறும் பட்சத்தில், பதிவு செய்த விவசாயிகள் கொண்டு வரும் கரும்புஅருகே உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com