டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டுவு சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்


கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டுவு சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவோரால் அப்பகுதி வழியே செல்லும் பெண்கள், கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மதுக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமையில், மாற்றுத் திறனாளிகளும், அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும்  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸாரும், வருவாய் ஆய்வாளர் கந்தசாமியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வட்டாட்சியருடன் பேசி டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com