Enable Javscript for better performance
தடையை மீறி ஊர்வலம்: அமமுகவினர் 100 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    


    திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை மற்றும் தடையை மீறியதாக அமமுகவைச் சேர்ந்த 100 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அமமுகவினர் கொடி பிடித்தபடி ஊர்வலம் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் குறிப்பிட்ட எல்லைக்கோட்டைத் தாண்டியும் சென்றனராம். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்த போலீஸார், ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களைத் தடுத்து நிறுத்தி சிலரை மட்டும் மனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர்.
    இதுகுறித்து, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் 100 பேர் மீது திருவள்ளூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai