Enable Javscript for better performance
பூந்தமல்லி இடைத்தேர்தல்: 14 மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனையில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
    பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 17 வேட்பு மனுக்கள் அளித்திருந்தனர். பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அத்தொகுதியின் இடைத்தேர்தல் பொது பார்வையாளர் பி.ஏ.ஷோபா, திருவள்ளூர் சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்னா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
    இதில், இத்தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் வைத்தியநாதன், திமுக சார்பில் ஏ.கிருஷ்ணசாமி, அமமுக சார்பில் ஏற்கெனவே இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட  டி.எ.ஏழுமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் பாரதிபிரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டோரின் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யப்படாத மாற்று வேட்பாளர்கள்-2, சுயேச்சை-1 என 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
    இதைத் தொடர்ந்து, வரும் 29-ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அன்றைய நாள் மாலையிலேயே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுவதுடன், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடும் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai