Enable Javscript for better performance
பூந்தமல்லி பேரவைத் தேர்தல்: பொதுப் பார்வையாளர் வருகை- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக பி.ஏ.ஷோபா நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் புதன்கிழமை தொகுதிக்கு வந்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தலுடன், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-இல் நடைபெற உள்ளது. எனவே பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் 2019-க்கான பொதுப் பார்வையாளராக பி.ஏ.ஷோபா நியமிக்கப்பட்டு, தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான செயல்களைக் கண்காணிக்க உள்ளார். 
    இவரை அனைத்து வேலை நாள்களிலும், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் மாலை 3 முதல் 4 மணிக்குள் இடைத்தேர்தல் தொடர்பாக நேரில் சந்திக்கலாம். மேலும், இடைத்தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து பொதுப்பார்வையாளரிடம் 99896 88893 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai