Enable Javscript for better performance
மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம்: டிடிவி தினகரன்- Dinamani

சுடச்சுட

    
    ttv1


    தேர்தலில் கூட்டணி அமைத்தவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறோம் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். 
     திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியது: 
     அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர். ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு திமுகவை டெபாசிட் இழக்கச் செய்தோம், அதிமுகவை அசர வைத்தோம். கூட்டணி அமைத்தவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் என்றார்.
     கும்மிடிப்பூண்டியில்...
    இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டிக்கு வந்த டிடிவி. தினகரனை புதுவாயல் முதல் கும்மிடிப்பூண்டி வரை அக்கட்சியினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அவரை வரவேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai