Enable Javscript for better performance
லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    


    திருவள்ளூர் அருகே லாரி ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பு (30). இவர் திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி வேலப்பன்சாவடியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றினார். வானகரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சின்னப்பையன் (34). நண்பர்களான இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்தது. 
    இந்நிலையில், கடந்த 2017 செப்டம்பர் 1-ஆம் தேதி வேலப்பன்சாவடி அருகே தனியார் கட்டடக் கழிவுநீர்த் தொட்டி மீது இருவரும் தூங்கச் சென்றனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சின்னப்பையன், உரல் கல்லால் தாக்கியதில் அன்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  இதுதொடர்பாக திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னப்பையனைக் கைது செய்தனர்.
    இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், குற்றம்சாட்டப்பட்ட சின்னப்பையனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai