Enable Javscript for better performance
வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்- Dinamani

சுடச்சுட

    

    வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்

    By DIN  |   Published on : 28th March 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாக்களிப்பது குறித்து வாகனங்களில் புதன்கிழமை விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன.
    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.சசி கலந்து கொண்டு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது சட்ட விரோதம் ஆகும், தேர்தலின்போது வாக்களிப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமை என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன. நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஸ்வரி, அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai