பொன்னேரி அருகே தண்ணீர் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு  

பொன்னேரியை அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி நிலத்தடி நீரை  விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 
பொன்னேரி அருகே தண்ணீர் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு  


பொன்னேரியை அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி நிலத்தடி நீரை  விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 
பொன்னேரி அருகே உள்ள பெருங்காவூர் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, குடிநீர் விற்கப்படுவதாகவும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 
அப்போது நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 
இந்நிலையில், பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். 
அப்போது அரசு அனுமதி இன்றி அங்கு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அதில் இருந்து குடிநீர் எடுத்து  விற்பனை செய்து வருவது தெரியவந்தது. 
இதையடுத்து, இச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com