முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஏரி மண் திருட்டு: 2 டிராக்டர்கள் பறிமுதல்
By DIN | Published On : 15th May 2019 04:03 AM | Last Updated : 15th May 2019 04:03 AM | அ+அ அ- |

பொன்னேரி அருகே ஏரியில் இருந்து மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் வாகனம், 2 டிராக்டர்களை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி வட்டம், பொதியாரங்குளம் கிராமத்தில் உள்ள ஏரியில் மண் திருட்டு நடைபெறுவதாக பொன்னேரி வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு மண் திருடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த வழியாக மண் கடத்திச் சென்ற 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.