முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
படகுகள் மோதல் சம்பவம்: 3 பேர் கைது
By DIN | Published On : 15th May 2019 04:04 AM | Last Updated : 15th May 2019 04:04 AM | அ+அ அ- |

பழவேற்காடு ஏரியில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக, 3 பேரை திருப்பாலைவனம் போலீஸார் கைது செய்தனர்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில், தடையை மீறி படகு சவாரி நடைபெறுவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி தடையை மீறி பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற படகு, முகத்துவாரம் அருகே எதிரே வந்த படகின் மீது மோதியது.
இந்த விபத்தில், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த, மேரி (40) நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருடன் பயணித்த 9 பேர் மீட்கப்பட்டு, பழவேற்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிந்து, தடையை மீறி படகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாக பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த குகன் (38), கான்ஸ்டைகிளைவ் (30), கோபி (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.