கீழாந்தூர் கங்கை அம்மன் கோயில் பிரம்மோற்சவம்
By DIN | Published On : 16th May 2019 07:48 AM | Last Updated : 16th May 2019 07:48 AM | அ+அ அ- |

திருத்தணி யை அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகங்கை அம்மன் கோயிலில் 25-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ மகா ஜாத்திரை விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜை, ஹோமங்கள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அம்மன் அலங்காரம், கும்பம் படையல், கூழ்வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அப்போது உடலில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறும் டிராக்டரை இழுத்துச் சென்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஊர்வலத்தில் துர்க்கை, பத்திரகாளி, வீரபத்திரர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்தும் பூங்கரகம் சுமந்தவாறு பம்பை, உடுக்கை முழங்க பக்தர்கள் ஆடிப்பாடி சென்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் திருத்தணி, சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை
வழிபட்டனர்.