சுடச்சுட

  

  ஊத்துக்கோட்டையில் ஆலமர உச்சியில் ஏறி லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
  சென்னைக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் லாரிகளை ஓட்டும் பணியில் ஆப்ரகாம் என்பவர் ஈடுபட்டு வந்தார். அண்மையில் அவரை டாஸ்மாக் கடையில் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
  அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆப்ரகாம், ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சோதனைச் சாவடி  அருகில் உள்ள ஆலமரத்தில் வியாழக்கிழமை ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். 
  இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆப்ரகாம் ஏறிய ஆலமரத்துக்கு கீழே உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பி செல்வதால் போலீஸாரின் ஆலோசனைப்படி ஊத்துக்கோட்டை பகுதியில் 2 மணிநேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. 
  ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில்  காவலர்கள் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர், ஆப்ரகாமிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் கழித்து அவர் கீழே இறங்கினார். 
  இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai