சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

    By DIN  |   Published on : 17th May 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுகாதாரத்  துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் வட்டார சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தம், முரளிகிருஷ்ணன், முரளிதரன், சுகுமார், நேசமுரளி, பகுதி சுகாதார செவிலியர்கள் ராணி, விஜயகுமாரி, அன்பரசி, ஜோதி முன்னிலை வகித்தனர்.
    தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மேட்டுத் தெருவில் தொடங்கிய பேரணி, பேரூராட்சி முழுவதும் சென்றது. இதில் பங்கேற்றவர்கள் டெங்கு ஒழிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு வீதிகளில் சென்றனர். அப்போது "டெங்கு இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்கப் பாடுபடுவோம் ' என அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
    அதையடுத்து நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் முன்னிலையில் வட்டார சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் பேசியது:
    பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கழிக்க தொலைக்காட்சியில் செலவிடும் நேரத்தில் சிறிதளவு தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒதுக்க வேண்டும். வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். தொட்டிகளை துணியால் மூடி வைக்க வேண்டும். வீடுகள் முன் காலி பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் போன்றவற்றை வீசி, கொசுக்கள் உற்பத்தியாக வழி செய்யக் கூடாது என்றார் அவர்.
    அதன்பின், சுகாதாரத் துறையினர் கும்மிடிப்பூண்டி மேட்டுத் தெருவில் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தி குறித்து ஆய்வு நடத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai