Enable Javscript for better performance
குடிமைப் பணித் தேர்வர்களுக்கு உதவும் செங்குன்றம் நூலகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குடிமைப் பணித் தேர்வர்களுக்கு உதவும் செங்குன்றம் நூலகம்

    By DIN  |   Published On : 27th May 2019 06:37 AM  |   Last Updated : 27th May 2019 06:37 AM  |  அ+அ அ-  |  

    குடிமைப் பணி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை அதிக அளவில் கொண்டுள்ளதால் செங்குன்றம் நூலகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
     திருவள்ளூர் மாவட்டம்,  செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியில் முழு நேர கிளை நூலகம் உள்ளது. இங்கு குளிர்சாதன வசதி,  நகல் எடுக்கும் வசதி,  கணினி பயன்பாடு ஆகியவை உள்ளன. இந்த நூலகத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
    பல்வேறு முதன்மையான எழுத்தாளர்களின் படைப்புகள்,  தமிழ் இலக்கியங்கள்,  இலக்கணங்கள், கவிதைகள் மற்றும் பல அறிஞர்களின் கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களிலும் குடிமைப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பல்வேறு புத்தகங்களும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான நூல்களும் இங்கு அதிக அளவில் உள்ளன.
    குழந்தைகளுக்கான கதை,  தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் இருப்பது குழந்தைகளை நூலகத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. தினசரி, வார மற்றும் மாத இதழ் அனைத்து வகையான இதழ்களும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. இந்த நூலகம் அமைதியாக உள்ளதால் நூல்களைப் படிக்க வாசகர்களுககு உகந்த சூழல் நிலவுகிறது. 
      செங்குன்றத்தில் நூலகம் கடந்த 1958-இல் குடிசையொன்றில் தொடங்கப்பட்டது. சிறிது சிறிதாக இதன் வளர்ச்சி இருந்தது. இப்போதைய இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்நூலகம் செயல்படுகிறது.
     இப்பகுதி ஊர்த் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும், உள்ளது. இங்கு பணியாற்றிய நூலகர் டி.வி.உமாராணி மற்றும் பணியாளர்களுக்கு நூலகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்குண்டு.  இங்கு நூலகராக இருந்த டி.வி.உமாராணிக்கு 2009-ஆம் ஆண்டில் நல்நூலகர் விருதை அப்போதைய கல்வி அமைச்சர் வழங்கினார். 
     பேருந்து நிலையத்துக்கு அருகே இருப்பதால் பெரும்பாலானோர் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  குடிமைப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான நூல்கள் இங்கு அதிகமாக உள்ளது. இதைப் பயன்படுத்திப் பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். தொடர்ந்து மேலும் பலர் இங்குள்ள நூல்களைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.
    இதுகுறித்து நூலகர் வ.ச.ஜோதிபாபு கூறியது: 
    கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில அளவில் நூல் இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாகப் பங்காற்றிய சிறந்த வாசகர் வட்டத்துக்கான நூலக ஆர்வலர் விருது, அதிக புரவலர்களைச் சேர்த்த வட்ட நூலகத்துக்கான விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு தினமும் 400 முதல் 500 வரைவாசகர்கள் வந்து செல்கின்றனர் என்றார். 
    இதுகுறித்து நூலக ஆர்வலர்கள் கூறியது:
     நூலகப் பயனாளிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக 4 கணினிகளை வழங்க வேண்டும். இந்நூலகத்தில் கணினிப் பயிற்சியையும் வாசகர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும். குடிமைப் பணி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்தினால் இங்கு வரும் வாசகர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp