பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து


திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்உள்ள வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மீண்டும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன. 
பின்னர், இந்த இயந்திரங்களை தனி அறையில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிரங்க் பெட்டிகளில் 333 கன்ட்ரோல் யூனிட்களும், 666 பேலட் பெட்டிகளும், 338 விவிபேட் இயந்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டன. 
தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டிகள் பூட்டப்பட்டு, இந்தப் பெட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் வைத்து பூட்டப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த அறைக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உதவி தேர்தல் அலுவலர் பார்வதி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு, தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ரமேஷ் (கும்மிடிப்பூண்டி), தாமோதரன் (ஊத்துக்கோட்டை) உடனிருந்தனர்.
இந்த வாக்குப் பதிவு இயந்தரங்கள் சீல் வைக்கப்பட்ட அறையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வைக்கப்படும் என்றும், பின்னர் உரிய அறிவிப்பு வந்தவுடன் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு முறையாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com