புழல் மத்திய சிறையில் காலிப் பணியிடங்களுக்கு ஜூன்10-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறை-2 இல் காலியாக உள்ள செவிலி உதவியாளர், இடைநிலை ஆசிரியர், துப்புரவாளர்,


திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறை-2 இல் காலியாக உள்ள செவிலி உதவியாளர், இடைநிலை ஆசிரியர், துப்புரவாளர், நாவிதர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானோர் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து புழல் மத்திய சிறை-2 சிறைக் கண்காணிப்பாளர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறை 2-இல் காலியாக உள்ள ஆண் செவிலிய உதவியாளர், லாரி ஓட்டுநர், இடைநிலை ஆசிரியர், நாவிதர், துப்புரவுப் பணியாளர் ஆகிய காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பம் செய்யலாம்.
இதில், ஆண் செவிலிய உதவியாளர் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஆசிரியர் பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லாரி ஓட்டுநர் பணியிடத்துக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன், ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிருப்பது அவசியம். அதேபோல் துப்புரவுப் பணியாளர், நாவிதர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் போதுமானது.
அனைத்துப் பணியிடங்களுக்கும் வயது வரம்பு 1.1.2019 அன்றைய நாளில் 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக எஸ்.சி, எஸ்.சி.ஏ. மற்றும் எஸ்.டி. ஆகியோருக்கு 35 வயதுக்குள்ளும், பி.சி.  32, எம்.பி.சி.  32 வயதுக்குள்ளும் மற்றும் ஓ.சி. பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இதில், முன்னாள் ராணுவத்தினர், முன்னுரிமை பெற்றோருக்கு அரசு விதிமுறைகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்குத் தகுதியானோர் வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-2 (விசாரணை), புழல், சென்னை - 66 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 
இதுகுறித்து தொலைபேசி எண் 044- 26590350 தொடர்பு கொண்டு, தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com