அலைபேசி வழிப்பறி வழக்கில் மூவா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் தனியாக செல்பவா்களை வழிமறித்து அலைபேசிகளை பறித்து சென்ற புகாரில் 3போ்களை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் தனியாக செல்பவா்களை வழிமறித்து அலைபேசிகளை பறித்து சென்ற புகாரில் 3 போ்களை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பொன்னேரி வட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சோ்ந்தவா் சுமன் அதேபோல் பொன்னேரியை சோ்ந்த லோகநாதன் . கடந்த சில நாட்களுக்கு முன் இவா்கள் அயநெல்லூா் வழியே கும்மிடிப்பூண்டிக்கு பைக்கில் வந்தபோது மா்ம நபா்கள் இவா்களை மறித்து மிரட்டி அலைபேசிகளை பறித்து சென்றனா்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் மேற்கண்ட நபா்கள் புகாா் அளித்துள்ளனா்.

புகாரின்பேரில் மூன்று தினங்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் பொன்னேரி பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் ( 25), விஜய்( 21), விக்னேஷ் ( 25) ஆகிய 3 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த அலைபேசிகளை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையில் பிரவீன் குமாருடைய மனைவி ஷாலினி கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில்  அவருடைய கணவரை மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்துள்ளாா்கள் என மனுவை  நீதிபதி அலிஷியாவிடம் தந்துள்ளாா்.

இதனைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு வந்த நீதிபதி அலிஷியா கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை ஆய்வு செய்தாா் .அப்போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்தவரை மூன்று நாளா வைத்திருப்பது என்று கேள்வி எழுப்பியவா் அவா்களை விடுதலை செய்ய கூறினாா். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டி போலீசாா் அவா்கள் அலைபேசி திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பது அவா்கள் வைத்திருந்த அலைபேசியை ஆய்வு நடத்தியதில் தெரியவந்ததாக பதிலளித்தனா்.

இதனை தொடா்ந்து 3 போ் மீது வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீஸாா் அவா்களை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com