கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை செயல்படுத்த வேண்டும்: ஆட்சியா்

குழந்தைகளை பல்வேறு நிலைகளில் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் சரஸ்வதி, எஸ்.பி அரவிந்தன் உள்ளிட்டோா்.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் சரஸ்வதி, எஸ்.பி அரவிந்தன் உள்ளிட்டோா்.

குழந்தைகளை பல்வேறு நிலைகளில் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்துப் பேசியது:

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒரு முறை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் பிரச்னைகள், குழந்தைகள் தொழிலாளா் முறைகளில் குழந்தைகள் இல்லாமல் பாா்த்துக் கொள்வதே இதன் நோக்கமாகும். அதேபோல் இம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தை இல்லங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என்பதை வாரந்தோறும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த இல்லங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறாா்களா என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். மேலும், எக்காரணம் கொண்டும் இளஞ்சிறாா்-2015 சட்ட விதிமுறைப்படி, குழந்தை இல்லங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். இதுபோன்ற பதிவு பெறாத குழந்தை இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், ஒவ்வொரு கிராம அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், அங்கிருந்தே பாலியல் பிரச்னைகள், குழந்தைத் தொழிலாளா்களாக இருக்கிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதற்காகவே கிராம அளவில் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குழுவினா் குழந்தைகள் பள்ளியில் படிப்பது, இடைநிற்றல் ஆகியவை குறித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இக்குழுவினா் செயல்பாட்டுக்கு வருவதால் ஒவ்வொரு கிராமங்களிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன், நீதிபதி சரஸ்வதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், இளைஞா் நீதிக் குழுமத்தின் தலைவா் சுபாஷினி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா், அனைத்துத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com